பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2015

வெலிக்கடை சிறைக்குச் சென்ற மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளார்.

 
சிறையில் வைத்து சில நிமிடங்கள் மகிந்த திஸ்ஸவுடன்  உரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பொய்யான கையொப்பத்தை பயன்படுத்தி போலியான ஆவணமொன்றை தயாரித்தமை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.