பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2015

போலி ஆவணங்களை தயாரித்த திஸ்ஸவின் நட்பு அரசியல்வாதிகள் ஐவர் கைது செய்யப்படவுள்ளனர்


போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐந்து முக்கிய அரசியல்வாதிகள் கைது செய்யப்பட உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் காலத்தில் ஆவணமொன்றை வெளியிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் போலியானது எனவும், அதில் இடப்பட்டுள்ள கையொப்பங்கள் போலியாக வைக்கப்பட்டவை எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மக்களை பிழையாக வழிநடத்தும் வகையில் ஆவணங்களை தயாரித்த சூழ்ச்சித் திட்டத்தில் மேலும் ஐந்து அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்