பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போட்டியிடச் செய்யவுள்ளதாக கூட்டமைப்பின் நான்கு கட்சிகள் தெரிவித்துள்ளன.
கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நுகேகொடையில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த 5.8 மில்லியன் வாக்குகளை பெற்றமையை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாசுதேச குறிப்பிட்டுள்ளார்.
இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்றும் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தம்மை பிரதமமந்திரி வேட்பாளராக களமிறக்கும் கலந்துரையாடல் தொடர்பில் இன்னமும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் தி;;ஸ்ஸ அத்தநாயக்கவை இன்று கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்ட பின்னர் ஊடகத்தினரிடம் மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்