பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2015

ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை : தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் போகும் தயாரிப்பாளர்


 ரஜினிகாந்த் பெயரில் இந்திப்படம் ஒன்று உருவாகியுள்ளது. ஆதித்ய மேனன் நடிப்பில் பைசல் அகமது இயக்கத்தில் உருவாகியிருக்கும் அப்படத்திற்கு ‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்று பெயர் வைத்தனர். இந்தப் படத்திற்கு என் பெயரில்  தலைப்பு வைக்கக்கூடாது என்று ரஜினி வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால் இது ரஜினியின் பெயரைக் கெடுக்கும் உள்நோக்கம் இல்லை என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறினர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஜினியின் பெயரை படத்தின் தலைப்பில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து படத்துக்கு வேறு தலைப்பு வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். ஆனால் தயாரிப்பாளரோ, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளார்களாம். இதுகுறித்து இயக்குநர் பைசல் கூறுகையில், "இந்த விஷயத்தை மேலும் வளர்க்க விரும்பவில்லை. ரஜினியை சங்கடப்படுத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆனால் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவெடுத்திருக்கிறார். அவரை என்னால் தடுக்க முடியவில்லை" என்றார்.