பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2015

அச்சுறுத்தியதாக பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸில் முறைப்பாடு

                                                                                  
news
தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி  விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 
 
நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு  கொண்ட சிலர் தன்னை அச்சுறுத்தினர் எனத்தெரிவித்து இன்று அதிகாலை முறைப்பட்டினைப் பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து மேலதிக தகவலைப் பெற்றுக் கொள்ள பிரதி அமைச்சருடன் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.