பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

மஹிந்தவுக்கு எதிராக தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி
கூட்டுத்தாபனம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த ஜனாதிபத் தேர்தல் காலங்களில் மஹிந்தவினுடைய விளம்பரங்களை இத்  தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்த விளம்பரங்களுக்கான கட்டண நிலுவை தொடர்பிலேயே வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 50 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை முன்னாள் ஜனாதிபதி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.