பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2015

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் சோசலிசக் கட்சியின் சொலதூண் மாநில வேட்பளராக புங்குடுதீவின் ஸ்ரீ ராசமாணிக்கம்

சுவிஸில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளராக சொலத்தூண் மாநிலதிலி இருந்து சோஷலிச கட்சி வேட்பாளராக ஸ்ரீஸ்கந்தராசா இராசமாணிக்கம் அவர்கள் தெரிவாகி இருக்கிறார் . புங்குதீவு மடத்துவெளி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இந்த இளைஞர் சமூக ஆன்மீக அரசியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர் . ஆரம்பத்தில் கிரேங்கன் நகரிலும் தற்போது ஓல்டேன் நகரிலும் வசித்து வருகிறார் புங்குட்தீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவனாகிய இவர் விட்டாமுயற்சியின் மூலம் முன்னேறி தற்போது சூறிச் விமான நிலையத்தின் அண்மையில் பிரபலமான சுங்க இறக்குமதி ஏற்றுமதி தீர்வை பன்னாட்டு நிறுவனம் ஒன்றை திறம்பட நடத்தி வருகிறார் இவரை பாராட்டுவதோடு மட்டுமன்றி தேர்தலில் வெல்ல வைப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம் ஈழத்தமிழனின் குரல் சுவிஸ் பாராளுமன்றத்தில் ஒலிக்க வைப்போம் என உறுதி கொள்வோமாகwww.pungudutivuswiss.com