பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2015

ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு

இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால தாமதிக்கும் யோசனையை, மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் ஆதரிப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன்.
இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நியாயமானது என கருதுகின்றேன் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இறுதி தீர்மானம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆணையாளரின் நிலைப்பாடு தீர்மானங்களில் முக்கிய தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.