பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2015

உதைபந்தாட்ட இறுதிப் போட்டி ஊரெழு றோயலை வீழ்த்தி கிண்ணம் வென்றது சென்மேரிஸ்

நாவாந்துறை சென்.மேரிஸ் விளையா ட்டுக் கழகத்திற்கும் ஊரெழு றோயல் விளை யாட்டு கழகத்திற்கும் இடையே நடைபெற்ற பரபரப்பான உதைபந்தாட்ட இறுதி ஆட்ட த்தில் 5-3 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

உரும்பிராய் சென்.மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதிப் போட்டி நேற்று மாலை 4 மணிக்கு உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டு கழகம் மோதியது.
பரபரப்பாக இடம்பெற்ற போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்ட த்தில் சிறப்பாக விளையாடிய நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழகம் மேலும் இரு கோல்கள் போட்டு வெற்றியை தனதாக்கியது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தை சேர்ந்த கஜகோப னும் தொடரின் ஆட்டநாயகனாக நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தின் யூட்டும் தெரிவாகின
ர்