பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2015

நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடந்த காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த விதமான குற்றச்சாட்டுக்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தும் எந்த தயார் நிலைகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் காரணங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டுச் சென்றனர்.  இவ்வாறு நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, விசேட விசாரணைப் பிரிவு, சர்வதேச பொலிஸ் உட்பட எந்த விசாரணைப் பிரிவுகளாலும் எவ்விதமான விசாரணைகளும் நடத்தப்பட மாட்டாது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.