பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2015

பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ


பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தற்போது நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடுகளை பொறுப்பேற்க வேண்டுமாறும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.