பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

கெஹலியவின் வீட்டில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை


நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கொழும்பு, கறுவாத்தோட்டம், கெப்பட்டிபொல மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து மூன்று லொறிகளில் பொருட்கள்  ஏற்றப்பட்டு,  கண்டியிலுள்ள வீட்டில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பொருட்கள் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டன.
 
இந்த பொருட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் அவரது படம் தாங்கிய  கோப்பைகளும் இருந்தன எனவே இவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.