பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2015

புதிய தமிழுடன் ஊடகத்துறை போட்டிகள்


 "அபியோகா மீடியா கிளப்"பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகத்துறைப் போட்டியில் கொச்சைத் தமிழில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தாள்களால் மாணவர்கள் அதிருப்தி.  

 
பண்டாரநாயக்க கல்லூரியின் "அபியோகா மீடியா கிளப்"பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மட்டத்திலான ஊடகத்துறை போட்டிகள் கடந்த 07-02-2015 அன்று அநுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றன.
 
மும்மொழிகளிலும் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட குறித்த போட்டிகளுக்காக வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தாள்கள் ஆங்கிலம், சிங்கள ஆகிய மொழிகளில் சீராகவும், தமிழ் மொழி மூலமான அறிவுறுத்தல் தாள்கள் எவ்வித கருத்துக்களும் புலப்படாதவாறு காணப்பட்டது.
 
இதனால் குறித்த போட்டியில் பங்குபற்றிய மணவர்கள் கருத்துக்கள் தெளிவில்லாததால் போட்டியில் சீரான முறையில் பங்குபற்ற முடியாமல் போனதாக கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=775503861108660235#sthash.COEZdMYz.dpuf