பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2015

மஹிந்தவை பார்ப்பதற்கு பஸ்களில் மக்கள் அழைத்து செல்லல்! அழுது நாடகமாடும் மஹிந்த: சம்பிக்க குற்றச்சாட்டு



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்கு குழுவாக இணைந்து மெதமுல்லைக்கு பஸ்கள் பயன்படுத்தி மக்களை அழைத்து செல்லப்படுவதாகவும், மஹிந்த மக்களுடன் இணைந்து அழுது நாடகமாடுவதாகவும் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எனது மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் மகிந்த அழுது நாடகமாடுகின்றார்.
பாரிய மோசடிகளை செய்த மகிந்தவின் சதி கும்பல் மீண்டும் அழுது புரண்டு மக்களின் இரக்கங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்