பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2015

மீண்டும் சிறைக்கே சென்றார் பாலித தெவரப்பெரும!


news
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்
 
மத்துகம - அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அவரை மண்டியிட வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்  இன்று மத்துகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
மத்துகம - அகலவத்த நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகம் ஒன்று திறக்கப்பட இருந்த நிலையில் அங்கு சென்ற பாலித தெவரப்பெரும பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது