பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2015

11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்

சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக
சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதையடுத்தே, பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
சிறிலங்காவின் பணவீக்கத்தை அளவிடும் பிரதான சுட்டியான, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பெப்ரவரி மாத பணவீக்கம் 2.6 வீதமாக குறைந்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாத பணவீக்கம் 3.2 வீதமாக இருந்தது. இது பெப்ரவரி மாதத்தில், 0.6 வீதத்தினால் குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பணவீக்கம் 4.2 வீதமாக காணப்பட்டது.
இது 2004ம் ஆண்டுக்குப் பின்னர், ஆகக் குறைந்த பணவீக்க நிலையாகும்.