பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2015

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது: டி.எம்.சுவாமிநாதன்


இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12ஆயிரம் பேர் தொடர்பில் தமக்கு தெரியாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 49 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தமது புனர்வாழ்வை முடித்துக் கொண்டதும் அவர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட 12ஆயிரம் பேர் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சிடமே கேட்க வேண்டும் என்று அமைச்சர் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்