பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2015

இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதா? சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றன.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும், போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிட தாமதமாக அமெரிக்காதான் காரணம் என்றும், முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.