பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2015

245 பேரில் 60 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்


 நாளைய தினம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட  வளலாய் மற்றும் தெல்லிப்பளை   பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட
வயாவிளான் ஆகிய பிரதேசங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு நாளைய தினம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீசேனா கலந்து கொள்ள உள்ளதாகவும் அதற்கான முன் ஏற்பாடுகள் இப்போது இராணுவத்தினராலும், பிரதேச செயலர் பிரிவு பணியளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
நாளை நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு  உட்பட்ட 245 பேர் மீள் குடியேற்றத்துக்காக  பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  இதில் 60 பேருக்கு மாத்திரம் நாளை சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.