பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2015

கனடாவில் நடிகை ரம்பாவுக்கு 2-வது பெண் குழந்தை


நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில்
நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார். 
ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத
கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. இதையொட்டி அவர் டொரன்டோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 
தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். குழந்தை பிறந்ததையொட்டி ரம்பாவின் கணவர் இந்திரன் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.