பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2015

மாணவியை ஏமாற்றி மனைவியாக்கிக்கொண்ட 45 வயது தொழிலாளி கைது



கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு பெண் தனது 19 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் அருகில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த பெண்ணுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுபற்றி அந்த பெண், ஆண்டனியிடம் கூறினார். உடனே அவர் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நோயை தானே மருத்துவம் பார்த்து குணப்படுத்துவதாக கூறினார்.

இதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு ஆண்டனி அடிக்கடி சென்றார். அப்போது பெண்ணின் மகளும் கல்லூரி மாணவியுமான அவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

இதற்கு அந்த மாணவி மறுத்தார். எனவே ஆண்டனி அந்த மாணவியை வெளியே அழைத்துச் சென்று மிரட்டி ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார். அதன் பிறகுதான் அந்த பத்திரம் திருமண ஒப்பந்த பத்திரம் என மாணவிக்கு தெரிய வந்தது. எனவே அவர் இதுபற்றி கொச்சி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ஆண்டனியை கைது செய்தனர். அவரிடமிருந்த ஒப்பந்த பத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுபோல ஆண்டனி வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.