பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2015

இரண்டாம் கட்டமாக 450 ஏக்கர் விடுவிப்பு; வசாவிளான் மக்களை எதிர்வரும் வெள்ளியன்று சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி 
மீள்குடியேற்றத்தின் இரண்டாவது கட்டமாக வசாவிளான் அச்சுவேலி வீதியிலுள்ள 450 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்படவுள்ளது என  மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரின் பீரிஸ் தெரிவித்தார். 

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் குழுகூட்டம் இன்று யாழ்.மாவட்ட  செயலகத்தில்   மீள்குடியேற்ற அதிகார சபையின்  தலைவர் ஹரின் பீரிஸ் கரீன்பீரீஸ் தலைமையில் இடம்பெற்றது.  இதன்போது யாழ். மாவட்ட அரச அதிபர்  சுந்தரம் அருமைநாயகம், இராணுவ அதிகாரிகள் , கடற்படை அதிகாரிகள் மற்றும்  தெல்லிப்பழை , கோப்பாய் பிரதே செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மீள்குடியேற்றத்தின் இரண்டாவது கட்டமாக தெல்லிப்பழை  பிரதேச பிரிவுக்குட்பட்ட வசாவிளான்-அச்சுவேலி வீதியில் உள்ள 450 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. 

இதில்  500 குடும்பங்களுக்குரிய காணி அப்பிரதேசத்தில் காணப்படுவதாவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பார்வையிடமுடியும்.  

எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றர் 

அன்றைய தினம்  வளலாய்ப்பகுதியில்  நடைபெறவுள்ள  நிகழ்வில் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

மேலும் தெல்லிப்பழை  பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட கட்டுவன் ,குரும்பசிட்டி போன்ற இடங்கள் மூன்றாம்  கட்டமாக மீள்குடியேற்றம் செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில்  கண்ணி வெடி அகற்றும்பணிகள் தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது . எனவே  எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பூர்த்தியாகும் என்றும்  அதன்பின்னர் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்.  

இதேவேளை, முதற்கட்டமாக வளலாய் பகுதி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு மக்கள்  தங்களுடைய சொந்த நிலத்தை பார்வையிட்டதுடன்  துப்புரவு செய்யும்  பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.