பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2015

6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட், நியூசிலாந்தின் நேப்பியரில் நடைபெற்ற 31–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–ஆப்கானிஸ்தான் (ஏ பிரிவு) அணிகள் மோதின. பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடி முதல் அணியாக கால் இறுதிக்குள் நுழைந்தது. 

நியூசிலாந்து அணி, இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்து வீழ்த்தி தனது பிரிவில் அசைக்க முடியாத அணியாக விளங்கி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து விளையாடியது. வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், ஆப்கானிஸ்தான் 186 ரன்களில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் 47.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. 

 நியூசிலாந்து 36.1 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் இலக்கை தகர்த்தது.  நியூசிலாந்து தனது ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.