பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2015

திருட்டு கும்பல் ஏழு பேர் கொடிகாமத்தில் கைது

கொடிகாமம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழிபறிகொள்ளையுடன் தொடர்புடைய இருவர் உட்பட சந்தேக நபர்கள் ஏழு பேரை நேற்று கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சிந்துராஜ் தெரிவித்தார்.

கடந்த 24ஆம் திகதி வரணி, சுட்டிபுரம் கோயில் பகுதியில் பகுதியில் பெண்ணின் நகையினை பறித்தெடுத் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் உட்பட, திருட்டு பொருட்களினை தம் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேரை கொடிகாமம் பொலிஸார் நேற்று கைது செய்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


கைதான இருவரும் 22வயது,மற்றும் 28 வயதுடைய மாலு சந்தி அல்வாய் பகுதியினை சேர்ந்தவர்களவர்கள் என தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும், சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு பவுண் நகை,மற்றும் 6 துவிச்சக்கரவண்டி என்பவற்றையும் மீட்டுள்ளனர்.


கைதான 7 பேரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.