பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

நாங்கள் தவறு செய்யவில்லை!– நாமல்

ங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைபாடு தொடர்பாக குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க எந்த நேரத்திலும் தயார் என பாராளுமன்ற உறுப்பினர நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள அரச களஞ்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறியரக ஹெலிகொப்டர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவிடம் வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அழைத்திருந்தனர்,
வாக்குமூலம் வழங்க சென்ற சந்தர்ப்பத்தில் நாமல் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளார் அதன் போது நாமல் இவ்வாறு ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் யோசித்த ராஜபக்சவிடம் 2 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச,
நாங்கள் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் பல விதமான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டது.
நாங்கள் அந்த சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு பின்னர் தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைபாடு தொடர்பாக குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க எந்த நேரத்திலும் தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தோம்.
அதேபோன்று நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.