பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2015

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு


எதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த கால அவகாசம் 2015ஆம் ஆண்டு மே 15வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுகுடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளின் தேர்தல்களும் குறித்த 234 சபைகளின் தேர்தலுடனே நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.