பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2015

பழிவாங்கும் நோக்கில் என்னை கைது செய்ய முயற்சி: கோத்தபாய - கைது செய்யுமாறு கோரிக்கை


அரசியல் சம்பவங்களின் அடிப்படையில், பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோத்தபாயவை கைது செய்வது குறித்து தேசிய நிறைவேற்றுச் சபை நேற்று எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மிதக்கும் ஆயுத கப்பல் தொடர்பான சகல விபரங்களும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எந்த தவறுடனும் தொடர்புடைய நபரைக் கைது செய்வது குறித்து தீர்மானிக்க தேசிய நிறைவேற்றுச் சபைக்கு அதிகாரமில்லை என சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.