பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2015

எதிர்க்கட்சி வரிசையில் அமர போகும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 11 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஆதரவு வழங்கியது எனினும் முஸ்லிம் காங்கிரஸ் இணக்கத்தை மீறியுள்ளதாக சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் மாகாண சபைக் கூட்டத்தின் போது தாம் உள்ளிட்ட 11 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.