பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2015

திருக்கேதீஸ்வரம் புதைகுழியை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
                     
மன்னார்  திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளுமாறு மன்னார்  நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பிலான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுதுக் கொள்ளப்பட்டது, அதன்போதே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் பகுதியில் 80க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, கண்டெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, இந்தப் பிரதேசத்தில் அகழ்வு வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று காணாமல் போனவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் மன்றில் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்  ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு   பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது .

இதேவேளை, முன்னர் அகழ்வு வேலைகள் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட பாழடைந்த கிணறு ஒன்று முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், அந்தக் கிணற்றின் உள்ளேயும் மனித எலும்புக் கூடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிலையில் குறித்த கிணறு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதனையும் தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதனையடுத்து அந்தக் கிணறு இருந்த இடத்தைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த தவணையில்  நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது,

அத்துடன் இந்தக் கிணறு சம்பந்தமாக கோரிக்கை விடுத்திருந்த சட்டத்தரணிகளும் அந்த இடத்தைச் சென்று பார்வையிடுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற சட்டத்தரணிகளினால் அந்தக் கிணறு இருக்குமிடத்தைக் கண்டறிய முடியாதிருந்ததாகவும் அங்கு மழை வெள்ளம் தேங்கியிருந்ததனால், கோடை காலத்தில் அதனைக் கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது .
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=473803922317674688#sthash.zDVhbQT0.dpuf