பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2015

கொக்குவில் இந்து கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைப்பு


கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்திலுள்ள மாலதி  கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

 
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. மேலும்  , இன்று விடுமுறை தினம் என்பதால் காலை பாடசாலைக்கு எவரும் சமுகமளித்திருக்கவில்லை. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு விசமிகள் இந்த வேலையை செய்துள்ளனர். 

 
சம்பவம் தொடர்பில் உடனடியாக யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கு அயலவர்களால் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீ பரவாமல் தடுத்துள்ளனர்.
 
எனினும் விளையாட்டு உபகரணங்கள்  எரிந்து சாம்பலாகியுள்ளது என்றும்  பாடசாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

 
 
இதேவேளை ,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் சிலர் ஒழுக்காற்று நடவடிக்கையில் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர்களே இந்த நாசகார வேலையினைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.