பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2015

ரயிலில் மோதுண்ட யாழ். இந்து மாணவன் சாவு


news
ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் சாவடைந்துள்ளார். 


கடந்த மாதம் 19 ஆம் திகதி  யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பு அற்ற ரயில் கடவையால் கடக்கும் போது ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா வைத்தியசலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன்  சிகிச்சை பலனின்றி நேற்று சாவடைந்துள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவனான கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18)   என்பவரே இவ்வாறு சாவடைந்தவராவார் .