பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2015

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை விரட்டியடித்தது மேற்கிந்திய தீவுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் இன்று நடந்த உலகக்கிண்ண 'பி' பிரிவு லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஹோல்டர், களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு நாசிர் அஜிஸ் (60), அம்ஜத் ஜாவேத் (56) அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 47.4 ஓவரில் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளையும், ரசல் 2 விக்கெட்டுகளையும், சாமுவேல்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து சுலப இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வீரர்களான டுவைன் ஸ்மித் (15), சாமுவேல் (9) ஏமாற்றினர்.
அபாரமாக ஆடிய ஜான்சன் சார்லஸ் (55) அரைசதம் அடித்தார். ரசல் (7) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜோனாதன் கார்டர் அரைசதமடித்தார்.