பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

தலைமன்னாருக்கு பரீட்சார்த்த ரயில் சேவை /மோடி வருகிறார்


தலைமன்னாருக்கான பரீட்சாத்த ரயில் சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. 


எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி தலைமன்னார் பியர் பகுதிக்கு வருகை தந்து தலைமன்னார் பியரிலிருந்து மடுவுக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு நாளை காலை 11.30 மணியளவில் மடுவீதியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் பரிச்சாத்திர ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

 இந்த பரீட்சாத்திர ரயில் சேவையின் ஆரம்ப நிகழ்வில்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வை.எம்.தேசப்பிரிய,எமாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து  கொள்ளவுள்ளனர்.

மேலும்  பரீட்சார்த்த சேவை ஆரம்பமாகவுள்ள நிலையில் ரயில் பாதையை கடக்கும்போது பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்கள் மிக அவதானத்துடன் செயல்படுமாறு ஒலி பெருக்கிகள் மூலமாகவும் மத வழிப்பாட்டு தலங்கள் மூலமாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை,  இந்திய பிரதமர் மோடியின்  வருகைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது.

 14ஆம்  திகதி காலை 10.45 மணிக்கு தலைமன்னார் பியருக்கு உலங்குவானூர்தி  மூலம் வரவிருக்கும் இந்திய பிரதமர் மோடியை  தமிழர் பண்பாட்டு நடனத்துடன் சுமார் 300 மீற்றர் தூரம் வரை வரவேற்கவும் 500 மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் இலங்கை இந்திய கொடிகளை அசைத்து இந்திய பிரதமரை வரவேற்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கொடியை அசைத்து த
-