பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2015

நயினை நாகபூசணியை வழிபட்டார் பிரதமர்


உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  தீவகப்பகுதிக்கு
தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.




அதன்படி இன்று நையினாதீவு  நாகபூசனி அம்மன் ஆலயத்திற்குச் சென்று  வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.அத்துடன் நாகவிகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.







பிரதமருடன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துகலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், மகளிர் விவகாரஅமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, நேற்றையதினம்  நல்லூர் கந்தன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் நாகவிகாரைக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.