பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

கோத்தபாய ராஜபக்ச அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட அதிகார துஸ்பிரயோகம் தொடர்பி;ல் மேலும் தகவல்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், லங்கா ஹொஸ்பிட்டல் உட்பட்ட பல நிறுவனங்களில் கோத்தபாய அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவென்ட் காட் நிறுவனம் வைத்திருந்த ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்ச, பலருக்கு எவ்வித நியமங்களும் இன்றி நியமனங்களை வழங்கியதாகவும் ராஜித குற்றம் சுமத்தியுள்ளார்.