பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2015

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது
சீன விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதும் இந்த புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பைஸர் முஸ்தபாவுக்கு இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என பேசப்படுகிறது.
நான்கு அல்லது ஐந்து பேருக்கு அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரியவருகிறது.