பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2015

இந்திய அணி தோல்வி : அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை


உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 50). இவர் அந்த மாநில நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார்.

இவர் இன்று மாலை தலைமைச் செயலகம் அருகில் உள்ள பல அடுக்குகளை கொண்ட அரசு கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. 

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, உமேஷ் தற்கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை, விசாரித்து வருகிறோம் என்றனர்.