பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2015

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அறிகுறி
புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போகும் ஆபத்து எற்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி குருணாகலில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
அத்துடன் இவர்கள் நாடாளுமன்றத்தில் தனி அணியாக இயக்கவும் அந்த அணியின் சிரேஷ்ட உறுப்பினரை எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யவும் தீர்மானித்துள்ளதாக இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.