பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2015

சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது

அமெரிக்காவில் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. 

உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹிங்கிஸ்-சானியா ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள மகரோவா-வெஸ்னினா ஜோடியை வீழ்த்தியது. 

முதல் செட்டை 6-4 என்ற கேம் கணக்கில் கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் 2-4 என்ற கணக்கில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பின் தங்கியிருந்தது. ஆனால் திடீரென எழுச்சி பெற்ற இந்த ஜோடி தொடர்ந்து 4 கேம்களை கைப்பற்றி 6-4 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.