பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை: மோடி

 தமிழகத்தில் மீண்டும் நோக்கியா ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கப்பட்ட நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம், கடந்த நவம்பர் 1ஆம் தேதி தனது நிறுவனத்தை மூடியது. இதனால், சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் கூறுகையில், ''நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம். ஆனால், தற்போது மீண்டும் நோக்கியா ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நோக்கியா ஆலை விரைவிலேயே மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என நம்பலாம்'' என்றார்.