பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015

தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது



தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தேன்கனிக்கோட்டையில் இருந்து புறப்பட்ட விவாசயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். ஊர்வலம் செல்ல தேன்கனிக்கோட்டையில் விவசாயிகள் 2 ஆயிரம் பேர் திரண்டனர். போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். அணை கட்டினால் ஏற்படும் பதிப்பு குறித்து சவ ஊர்வலம் நடத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்  என்று விவசாயிகள் தெரிவித்தனர்.