பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2015

இந்திய அணியுடன், அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம்.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 3–வது கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல்–ஹக்  அளித்த ஒரு பேட்டியில் ‘உலக கோப்பை போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவில் மாற்றம் இல்லை. 

நான் ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணமாக நான் கருதுகிறேன். உலக கோப்பையின் முடிவு மற்றும் எனது செயல்பாடுகளை பொறுத்து எனது முடிவில் மாற்றம் இருக்காது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன். இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியுடன், அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம். உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான மோசமான சாதனையை மாற்றுவதற்குரிய ஒரு வாய்ப்பாகவே கருதுவோம்’ என்று தெரிவித்துள்ளார்