பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2015

ஜெயலலிதாவின் பிறந்த நாள் பேனரை கிழித்த டிராபிக் ராமசாமி


 ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்து பேனர்களை டிராபிக் ராமசாமி கிழித்ததால் சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்த  நாளையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் சென்னை முழுவதும்  பல்வேறு பகுதிகளில் சாலை  ஓரங்களில் ஜெயலலிதாவை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

அந்த பேனர்களை பிறந்த நாள் முடிந்தும்  அகற்றாததால் பல இடங்களில் போக்குவரத்துக்கு  இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தது. இது குறித்து  பொதுமக்கள்  மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். ஆனால் பேனர்களை அகற்றுவது குறித்து  மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில்  ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில் பிரமாண்டமான முறையில் வைக்கப்பட்டிருந்த 3 ஜெயலலிதா பிறந்த நாள் பேனர்களை பொது  மக்கள் முன்னிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்து எரிந்தார்.
தகவலறிந்த  போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு  விரைந்தனர். ஆனால் டிராபிக் ராமசாமியை தடுக்க முடியாமல் போலீசாரும், அதிகாரிகளும் திணறினர். கிழித்து எறியப்பட்ட பேனர்கள் அனைத்தும் சமூக  நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி சார்பில் வைக்கப்பட்டதாகக்  கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ராயப்பேட்டை பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது