பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2015

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.
இந்த அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தது.
இவர்கள் மூவரும் இடமாற்றம் பெற்ற மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை தங்கள் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இடமாற்றத்தின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்தின் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சிக்கும், கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் வரும் டிசம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.