பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

புதுக்குடியிருப்பில் திரண்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள்


விடுதலைப் போராட்டத்துக்காக தங்களை அர்ப்பணித்து தற்போது புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் வாழும் போராளிகளுக்கும், போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கும் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் உதவித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. 
 
இதன் ஒரு கட்டமாக கடந்த முல்லைத்திவு புதுக்குடியிருப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மாவீரர்களின் குடும்பங்கள், காணாமல் போனோரின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்துக்கு  மேற்ப்பட்டவர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.
 
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மக்களை அழைத்து தங்களின் இன்றைய நிலைமை தொடர்பாக தெளிவுபடுத்தினர்.
 
அதன்போது தாங்கள் எந்த உதவிகளும் இன்றி இருப்பதாகவும் தங்களின் இந்த உதவித் திட்ட முயற்சியை நாங்கள் வெகுவாக வரவேற்பதுடன் இதற்காக தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
 
மேலும் இவ் விடயத்தில் எந்தவித அரசியல் வாதிகளையும் உள்வாங்காது தூய நோக்கோடு முன்னகர்த்திச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.
 
புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மரணமடைந்த போராளிகளின் குடும்பங்களையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இவ்விடயத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்று அரசியல் கலப்படமின்றி செல்வதே எல்லோருக்கும் நன்மை பயக்குமென்றும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த சவால்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க தயார் எனவும்  வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=841773912411817507#sthash.G7urlsC4.dpuf