பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

தூக்கில் தொங்கிய நிலையில் மயிலிட்டியில் சிப்பாயின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் மயிலிட்டி 10ஆவது பொறியியல் பிரிவு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்  ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை படைமுகாமிற்கு பின்புறத்தில் உள்ள மாமரம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பதவிவெல ரந்தெனிகல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய புஸ்பகுமார என அடையாளம்  காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்