பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2015

நரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல! நீதிமன்றம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் அவருடையதல்ல என உறுதியாகியுள்ளது.
குறித்த விமானத்தை விஜேவர்தனவின் மகள் அனோமா விஜேவர்தனவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
யோசித்த ராஜபக்ச மற்றும் ரே.விஜேவர்தன ஆகியோரின் உரிமைகளுக்காக போராடிய சட்டதரணிகள் மற்றும் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராயுமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.
குறித்த விமானம் ரே.விஜேவர்தனவினால் ஒன்றினைக்கப்பட்ட உற்பத்தி என்பது பரிசோனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு சுட்டிகாட்டியுள்ளது.