பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2015

ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் எனவும் ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் கடற்படையின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் அம் மூவரும் தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.