பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2015

தோல்வியிலும் சாதனை படைத்த டோனி

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் இந்தியா அணி தோல்வி அடைந்தாலும், அணித்தலைவர் டோனி
புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
 
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு அணித்தலைவராக டோனி 6000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
 
இந்த இலக்கை கடந்த மூன்றாவது அணித்தலைவராக டோனி உள்ளனார்.
 
டோனி இதுவரை 178 போட்டிகளில் அணித்தலைவராக செயல்பட்டு 6,022 ஓட்டங்களை குவித்துள்ளார்.
 
இந்த தர வரிசையில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (8,497 ரன்), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் (6,295 ரன்) ஆகியோர் முன்னிலையில் வகிக்கின்றனர்.
 
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டியில் டோனி 8499 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது