பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2015

குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும்: தமிழிசை பதிலட


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்பு, தாம்பரத்தை தாண்டி தாமரையை யாருக்குமே தெரியாது என்று கூறியிருந்ததற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், தாம்பரத்தை தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று அவர் பேசி இருப்பதால், அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது என்பது தெரிகிறது.

குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம்.

குஷ்பு ஒரு பிரபலமான நடிகையாக இருந்தாலும், பாஜகவை பற்றி பேசித்தான் அரசியல் முகவரி தேடிக் கொள்ளும் நிலையில் உள்ளார் என்றார்.